கட்டுப்பாட்டை இழந்த லாரி, அங்கிருந்த தடுப்பு சுவரில் மோதியது. பின்னர் ஏரிக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியில் இருந்த சமையல் காஸ் சிலிண்டர்கள் சிதறி தண்ணீரில் மிதந்தது. மேலும் இடிபாட்டில் சிக்கிய டிரைவர் நீலகண்டன் லேசான காயம் அடைந்தார். விபத்தை கண்டு அவ்வழியாக சென்றவர்கள் மோரணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், இடிபாட்டில் சிக்கி தவித்த டிரைவர் நீலகண்டனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விபத்து குறித்து மோரணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து காஸ் சிலிண்டர்களை மீட்டனர். லாரியும் மீட்கப்பட்டது.
The post ஏரியில் லாரி கவிழ்ந்தது: தண்ணீரில் மிதந்த சமையல் காஸ் சிலிண்டர்கள் appeared first on Dinakaran.