ஆளுநர், ஆட்சியாளர்கள் தான் சொல்வதை கேட்டே ஆகவேண்டும் என்னும் மனநிலையில் இருந்து விலகவேண்டும். காந்தியடிகளின் நினைவுதினம், ஒவ்வொரு வருடமும் எக்மோர் அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அனுஷ்டிக்கப்படுகிறது. இதே ஆளுநர் கடந்த 2023 வருடம் முதல்வருடன் காந்தியடிகளின் நினைவுதினத்தில் மரியாதை செலுத்தினார்.
காந்தியின் இறுதிக்காலத்தில் அவரது தனிச்செயலாளராக இருந்த தியாரே லால் நய்யார் தாம் எழுதிய ‘மகாத்மா காந்தி கடைசிக் கட்டம்’ என்ற நூலில் வெள்ளிக்கிழமையன்று நல்ல செய்தி வரும். எனவே ரேடியோவை தொடர்ந்து கேட்கவும் என்று ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் சில இடங்களில் ஏற்கெனவே கூறியிருந்தார்கள். அது மட்டுமல்ல, காந்தி கொல்லப்பட்ட செய்தி வெளியானதும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் பல இடங்களில் இனிப்புகளை விநியோகித்து கொண்டாடினார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். எந்த சித்தாந்தம் உடையவர்கள் தேசப்பிதாவின் இறப்பைக் கூட கொண்டாடினார்கள் என்று ஆளுநர் சொல்லுவாரா?
‘தசரா விழாவின் போது அரக்கனான ராவணனை எரிப்பதுபோல, இனிமேல் காந்தி கொல்லப்பட்டதை ஒவ்வொரு வருடமும் இப்படித்தான் சுட்டு கொண்டாடப் போகிறோம்’ என ஊடகங்களிடம் பகிரங்கமாக சொன்னேரே புஜா சகுன் பாண்டே, அவர் எந்த கொள்கையை அடிப்படையாகக் கொண்டவர் என்று ஆளுநர் சொல்லுவாரா?
தந்தை பெரியார் அவர்கள், காந்தி கொடியவன் கோட்சேவால் சுடப்பட்டு இறந்தவுடன், இந்த தேசத்திற்கு காந்தி தேசம் என்று பெரியடப்படவேண்டும் என்று கூறியதை ஆளுநருக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான இடங்களின் வரலாற்றை ஆளுநர் அறிந்து கொள்ள வேண்டும்: செல்வப்பெருந்தகை விமர்சனம்! appeared first on Dinakaran.