பாஜவினர் பெரியாரை விமர்சிப்பர். ஆனால் அம்பேத்கரை விமர்சனம் செய்ய மாட்டார்கள். ஆர்எஸ்எஸ்காரர்களும் அப்படித்தான். ஏனென்றால் இந்தியா முழுவதும் இருக்கின்ற 30 கோடிக்கும் மேற்பட்டோர் அம்பேத்கரை குலதெய்வமாக ஏற்று வணங்கி வழிபட்டு வருகின்றனர். தலித் அல்லாதவர்களையும், இடதுசாரி சிந்தனை உள்ளவர்களையும் அரவணைத்து ஒருங்கிணைந்த எழுச்சியை இந்த மண்ணில் உருவாக்க வேண்டிய தேவையிருக்கிறது.
தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவில் பொடா சட்டம் இருக்கும்போதே ஈழத்துக்கு சென்று விட்டு திரும்பியவன் நான். ஒரு அண்ணன் இங்கே இருக்கிறேன். நீங்கள் தைரியமாக போராடுங்கள். உங்களை ஒருநாள் ஒட்டுமொத்த தமிழகமும் தலைவராக ஏற்று கொள்ளும் காலம் வரும் என்று சொன்னவர் தான் பிரபாகரன். சீமான் சொன்னது போல் இது ஆமைக்கறி கதையல்ல. இட்டுக்கட்டி பேசுபவன் அல்ல நான். எனக்கு உண்மையிலேயே உணவு பரிமாறினார். இவ்வாறு அவர் பேசினார்.
The post ‘‘இது ஆமைக்கறி கதை அல்ல’’ ‘பொடா’ அமலில் இருக்கும் போதே ஈழத்துக்கு சென்று வந்தேன்: திருமாவளவன் பேச்சு appeared first on Dinakaran.