மருத்துவ மாணவர் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடுவோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்!!

சென்னை : இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மருத்துவக் கட்டமைப்பு அதிகமாக உள்ளது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்; முதுநிலை மருத்துவப் படிப்பு, வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை அமல்படுத்தினால், மாநிலத்தின் உரிமைகள் பாதிக்கப்படுவதுடன், மாநிலத்தின் உள்ஒதுக்கீடுகள் பாதிக்கப்படும். எய்ம்ஸ், ஜிப்மர் போன்றவற்றில் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த ஒதுக்கீடு செல்லும் என்றும், மாநிலத்தில் வசிப்பிடம் ரீதியாக எந்த ஒதுக்கீடு கிடையாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பால் இந்த ஆண்டுக்கான முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு பாதிப்பு இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பால் 1,207 மருத்துவ இடங்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவ மாணவர் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடுவோம். மருத்துவப் படிப்புகளுக்கான மாநில இட ஒதுக்கீட்டில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும். 50% முதுநிலை மருத்துவ இட ஒதுக்கீடு மூலம் 1,207 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். 50% இட ஒதுக்கீடு ரத்தானால் 1,207 இடங்கள் பறிபோகும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மருத்துவ மாணவர் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடுவோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்!! appeared first on Dinakaran.

Related Stories: