சேலம்: நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதுள்ள அதிருப்தியில் நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். நேற்று முன்தினம் சேலம் ஒன்றிய பொறுப்பாளர் ரமேஷ். 50 பேருடன் விலகுவதாக அறிவித்த நிலையில், நேற்று நாதக சேலம் மேற்கு மாவட்ட பொருளாளர் சங்கர், ஏற்காடு சட்டமன்ற தொகுதி நிர்வாகி சதீஸ்குமார் மற்றும் நிர்வாகிகள் 200 பேருடன் கட்சியில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் தங்களை விலக்கி கொள்வதாக முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளனர். இதுகுறித்து சங்கர் கூறும்போது, ‘உண்மையில் கட்சிக்காக உழைத்த எங்களுக்கு மரியாதை இல்லை. மாவட்ட பொறுப்பாளர்கள் சரியாக செயல்படுவதில்லை. இதனால் கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகி வருகின்றனர். தற்போது என்னுடன் பயணித்த 200 உறுப்பினர்களும் நாதகவில் இருந்து விலகி உள்ளோம்’ என்றார்.
The post ஏற்காடு தொகுதி நாதக நிர்வாகிகள் 200 பேர் விலகல் appeared first on Dinakaran.