விடுதலை சிறுத்தைகள் கொடி ஏற்றினால் கொடியை பிடுங்கிபோடு என்கிறார் ராமதாஸ். ஆனால் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பிற்படுத்தப்பட்டவர்கள் இல்லை என்பதை எதிர்ப்பு தெரிவித்து போராட முனைப்பு காட்டி இருக்கிறாரா? பாஜ ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவார்கள். ஈரோடு இடைத்தேர்தலை மனதில் வைத்து பேசுகிறார்கள். பாஜ ஆதரவாளர்கள் எல்லாம் வாக்கு போட வேண்டும் என்பதற்காக பெரியாரை விமர்சித்து பேசுகிறார்கள். பாஜ ஓட்டு வேண்டும். அதிமுக நிற்கவில்லை. அந்த ஓட்டு வேண்டும். பாஜ- அதிமுக ஓட்டு போடும் நபர்கள் தற்போது அந்த கட்சிகள் நிற்காததால் திமுகவுக்கு போட மாட்டார்கள் என்ற காரணத்தால் அந்த வாக்குகளை பெறுவதற்காக பெரியாரை விமர்சித்து பேசுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
The post ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காகவே பெரியார் குறித்து அவதூறு பேச்சு: திருமாவளவன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.