மஹா கும்பமேளா கூட்ட நெரிசலுக்கு அரைகுறை ஏற்பாடுகளே காரணம்: காங்கிரஸ் தலைவர் கடும் கண்டனம்

டெல்லி: கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு அரைகுறை ஏற்பாடுகள், VIPகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது, நிர்வாகத்தை விட சுய விளம்பரத்தில் அதிக கவனம் செலுத்துவது ஆகியவைதான் காரணம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். பல கோடி ரூபாய் செலவு செய்து இவ்வளவு மோசமான ஏற்பாடுகள் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஒன்றிய, மாநில அரசுகள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக பக்தர்களின் அடிப்படை வசதிகளை உறுதி செய்து, மற்றுமோர் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post மஹா கும்பமேளா கூட்ட நெரிசலுக்கு அரைகுறை ஏற்பாடுகளே காரணம்: காங்கிரஸ் தலைவர் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: