சேலம்: நாம் தமிழர் கட்சியில் இருந்து மேட்டூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகி, தன்னுடன் 500 பேர் விலகியுள்ளதாக முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி நிர்வாகிகளை மதிப்பதில்லை, யாருடைய கருத்தையும் கேட்பதில்லை, என நிர்வாகிகள் குற்றம்சாட்டி அடுத்தடுத்து விலகி வருகின்றனர். இந்நிலையில், நேற்று நாம் தமிழர் கட்சியின் மேட்டூர் சட்டமன்ற தொகுதி துணை தலைவர் ரகு மற்றும் தங்களுடன் பயணித்த 500 பேர் கட்சியில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகிக் கொள்வதாக முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார். ‘நாம் தமிழர் கட்சியின் மேட்டூர் சட்டமன்ற தொகுதியின் துணை தலைவராகிய நான், மற்றும் என்னோடு பயணித்த 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் கட்சியில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகிக் கொள்கிறோம்.கட்சியில் கடந்த 7 ஆண்டாக பயணித்து என்னுடைய இளமை காலங்களையும், பணம், உழைப்பு அனைத்தும் இழந்து விட்டேன்’ என அதில் அறிவித்துள்ளார்.
The post மேட்டூர் தொகுதி நிர்வாகி உள்பட நாதக நிர்வாகிகள் 500 பேர் விலகல் appeared first on Dinakaran.