அடகு வைத்த 100 சவரன் மோசடி? மாற்றுத்திறனாளி மகனுடன் தாய் திடீர் தர்ணா


செங்கல்பட்டு: மறைமலைநகர் அருகே சேக்கிழார் தெருவில் வசித்து வருபவர் ராணி. இவர் தனது உறவினரின் மருத்துவ செலவிற்காக 2024ல் அருகில் உள்ள ஒரு அடகு கடையில் 100 சவரன் நகை வைத்துள்ளார். பின்பு நகையை மீட்க சென்றபோது கடைக்காரர் நகையை கொடுக்காமல் அலைக்கழித்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ராணி மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். அங்கு புகார் வாங்க மறுத்த நிலையில் கூடுவாஞ்சேரி காவல் உதவியாளர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு புகார் அளித்தார். அந்த புகார் மறைமலைநகர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

பின்பு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் காவல் நிலையத்தில் வைத்து பஞ்சாயத்து பேசியதாக தெரிகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட ராணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பின்பு அதனை வைத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மறைமலை நகர் காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவுச் செய்தும் இதுவரை இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை காவல் நிலையத்தில் எதிர் தரப்பினரை விசாரணைக்கு கூட அழைக்கவில்லை. இந்நிலையில் ராணி மற்றும் அவரது தாய், மாற்றுத்திறனாளி மகன் ஆகியோர் நேற்று மறைமலைநகர் காவல் நிலையத்திற்கு வந்தனர்.

நகையை மீட்டு தராமல் அலைக்கழிப்பதாக கூறி மறைமலைநகர் காவல் ஆய்வாளர் கோவிந்தராஜை கண்டித்து தனது தாய், மற்றும் மாற்றுத்திறனாளி மகளுடன் தர்ணாவில் ஈடுபட முயன்றார். பணியில் இருந்த காவலர்கள் மற்றும் பெண் போலீசார் ஆகியோர் பாதிக்கப்பட்ட ராணியை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று விசாரித்தனர்.

The post அடகு வைத்த 100 சவரன் மோசடி? மாற்றுத்திறனாளி மகனுடன் தாய் திடீர் தர்ணா appeared first on Dinakaran.

Related Stories: