இதுபற்றி மாப்பிள்ளை வீட்டார் சேலம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், எங்களுக்கு ₹3 லட்சத்திற்கும் மேல் செலவாகியுள்ளது. எனவே அந்த பணத்தை பெண் வீட்டார் தரவேண்டும் என கூறியிருந்தனர். அதற்கான ரசீதை போலீசார் கேட்டனர். அதன்மூலம் 1.25 லட்சத்திற்கும் மேல் செலவாகியிருப்பது தெரிந்தது. இதேபோல் பெண் வீட்டாரும் எங்களுக்கும் செலவாகி விட்டது. எங்களால் பணத்தை திரும்ப செலுத்த வாய்ப்பு இல்லை என தெரிவித்தனர். இருதரப்பினரும் செலவுகளை கூறிக்கொண்டிருந்த நேரத்தில், மாயமான புதுப்பெண் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தார்.
ஓமலூர் மகளிர் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த அவர், எனக்கு 20 வயதாகிறது. நான் ஒருவரை காதலித்து வந்தேன். எனது பெற்றோர் எனக்கு திருமண ஏற்பாடுகளை செய்தனர். அந்த மாப்பிள்ளைக்கு 33 வயது என தெரிவித்தனர். ஆனால் அவருக்கு 40 வயது இருக்கும். என்னை விட 20 வயது மூத்தவருக்கு திருமணம் செய்து வைக்கப் பார்த்தனர். இதனால் திருமணம் வேண்டாம் என சொன்ன போதும் அவர்கள் கேட்கவில்லை. இதனால் மண்டபத்தில் இருந்து வந்துவிட்டேன். நான் காதலிப்பவரை திருமணம் செய்து வையுங்கள்’ என்றார்.
இதையடுத்து அப்பெண் காதலிக்கும் வாலிபரை தொடர்பு கொண்ட போலீசார், விசாரணைக்கு வருமாறு அழைத்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே மாப்பிள்ளை வீட்டாரிடம், பணம் தொடர்பாக நீதிமன்றம் சென்று பார்த்துக்கொள்ளும்படி போலீசார் கூறி, அவர்களை அனுப்பி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
The post 20 வயது மூத்தவருடன் திருமண ஏற்பாடு மண்டபத்திலிருந்து மணமகள் ‘எஸ்கேப்’: போலீசில் தஞ்சம் appeared first on Dinakaran.
