×

வேறு மாநிலத்தவரின் வேட்புமனு ஏற்பு.! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரி மணிஷ் மாற்றம்.! புதிய அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமனம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இதில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பத்மாவதி என்ற பெண்ணும் வேட்புமனு தாக்கல் செய்தார். வேறு மாநிலத்தை சேர்ந்தவரின் வேட்புமனு ஏற்கப்பட்டு இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. 47 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதேவேளை, வேறு மாநிலத்தை சேர்ந்தவர் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக புகார் எழுந்த நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், அப்பெண்ணின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு 46 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல்பட்டு வந்த மணிஷ் மாற்றப்பட்டு புதிய அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ஒசூர் மாநகராட்சி ஆணையராக உள்ள ஸ்ரீகாந்த் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

The post வேறு மாநிலத்தவரின் வேட்புமனு ஏற்பு.! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரி மணிஷ் மாற்றம்.! புதிய அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Erode East ,Manish ,Srikanth ,Erode ,Erode East Assembly Constituency ,Karnataka ,Erode East Constituency ,Election ,Dinakaran ,
× RELATED கர்நாடக பெண் வேட்பு மனு...