கடந்த வாரம் பவுனுக்கு ரூ.800 வரை உயர்ந்தது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான திங்கட்கிழமை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.58,720-க்கும், நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு பவுன் ரூ.58,640-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,720-க்கும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,340க்கும் விற்பனையாகிறது. கடைசியாக கடந்த அக்டோபரில் தங்கம் விலை பவுன் ரூ.59,640-க்கு விற்பனையானதே உச்சமாக இருந்த நிலையில் மீண்டும் அதையே நோக்கி தங்கம் விலை பயணிப்பதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
The post பவுனுக்கு ரூ.80 அதிகரிப்பு தங்கம் விலை ரூ.59,000 நெருங்குகிறது: நகை வாங்குவோர் அதிர்ச்சி appeared first on Dinakaran.