கொடைக்கானல் : கொடைக்கானலில், கடும் பனிமூட்டத்துடன் சாரல் மழையும் பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும்.
தற்போது, பொங்கல் விடுமுறை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த சில தினங்களாகவே பகலில் வெயிலும், மாலையில் கடுங்குளிரும் நிலவி வந்தது. உறை பனியும் நிலவி வந்ததால் கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் வித்தியாசமான வானிலையை அனுபவித்து மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் கொடைக்கானலில் நேற்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் மேகமூட்டம் சூழ்ந்தது. தொடர்ந்து, அடர் பனிமூட்டத்தின் காரணமாக எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலை இருந்து வருகிறது. மேக மூட்டத்துடன் கூடிய சாரல் மழையும் பெய்து வருவதால் கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post குளு குளு கொடைக்கானலில் எதிரே இருப்பது யார் என்றே தெரியாத அளவு பனிமூட்டம் appeared first on Dinakaran.