கடமலை-மயிலாடும்பாறை ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை அதிகாரிகள் ஆய்வு

வருசநாடு, ஜன. 12: கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மயிலாடும்பாறை, தங்கம்மாள்புரம், கடமலைக்குண்டு, உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகளில் புதிய சிமெண்ட் சாலை, சாக்கடை வடிகால், பள்ளி கட்டிடம், கழிப்பறை,பாலம் , தடுப்பு சுவர், தடுப்பணை, ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டுமான பணிகளை தேனி மாவட்ட ஊராட்சி திட்ட இயக்குனர் அபிதாஹனீப் ஆய்வு செய்து பார்வையிட்டார்.

இதில், க.மயிலாடும்பாறை ஒன்றிய ஆணையாளர்கள் முருகேஸ்வரி, மாணிக்கம், மயிலாடும்பாறை யூனியன் பொறியாளர்கள் கார்த்திக், முத்துக்கனி, மேற்பார்வையாளர்கள் ரவிக்குமார், பரமசிவம், டெக்னிக்கல் உதவியாளர்கள் அழகுராஜா, பிரகாஷ், ராஜேஷ், அரசு ஒப்பந்ததாரர்கள் மயிலை பாலன், சுப்புராஜ், செல்வம், உதயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

The post கடமலை-மயிலாடும்பாறை ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: