இந்திய வாலிபர் சங்கத்தினர் மறியல்

சேந்தமங்கலம், ஜன.10: எருமப்பட்டியில் இந்திய வாலிபர் சங்கத்தின் சார்பில், மாவட்ட பொருளாளர் சிவச்சந்திரன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் நேற்று எருமப்பட்டியில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கடந்த 3 ஆண்டுகளாக எருமப்பட்டி ஊர் பொதுமக்கள் ஜல்லிக்கட்டு விழா குழுவின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வந்தது. தற்போது அந்த அரசாணை வைத்து எருமப்பட்டி அடுத்துள்ள பொன்னேரி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மற்றொரு குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இதனை வருவாய்த்துறையினர் அனுமதி வழங்க கூடாது என வலியுறுத்தப்பட்டது. அப்போது வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர்கள், எருமப்பட்டி கைகாட்டி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த எருமப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மறியலில் ஈடுபட்ட நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து வருவாய்த் துறையினரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து, மறியலை கைவிட்டனர். அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டதாக 43பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

The post இந்திய வாலிபர் சங்கத்தினர் மறியல் appeared first on Dinakaran.

Related Stories: