சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று ‘எக்ஸ்’ சமூகவலைதள பதிவு: ஆளுங்கட்சி வரிசையோடும், சபாநாயகரோடும் சட்டசபை முடிந்துவிட்டதா? சட்டசபை கேமராக்கள் இன்றும் எதிர்க்கட்சியின் பக்கம் திரும்பவே இல்லை. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி வரிசை அவ்வளவு அச்சுறுத்துகிறதா? எதற்காக இவ்வளவு அஞ்சி நடுங்குகிறீர்கள்? தமிழ்நாடு சட்டசபை நிகழ்வுகளை, எந்தவித ஒளிவு மறைவுமின்றி, முழுமையாக, மக்களின் குரலான எதிர்க்கட்சியின் கருத்துகளை மக்களுக்கு நேரடி ஒளிபரப்ப வேண்டுமென திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
The post பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் பேசுவதை ஒளிபரப்ப மறுப்பது ஏன்? எடப்பாடி கேள்வி appeared first on Dinakaran.