சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டியில் ஆட உள்ளது. முதல் டெஸ்ட் வரும் 29 முதல் பிப்.2ம்தேதி வரையும், 2வது டெஸ்ட் பிப்.6-10ம் தேதி வரையும் கல்லே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தியாவுக்கு எதிராக பார்டர்-கவாஸ்கர் டிராபியை 3-1 என வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றுவிட்ட நிலையில், கேப்டன் கம்மின்ஸ், மனைவியின் 2வது பிரசவத்திற்காக விலகி உள்ளார்.
இதனால் ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மிட்செல் மார்ஷ் நீக்கப்பட்டுள்ளார். அணி விபரம்: ஸ்டீவன் ஸ்மித்(கே), சீன் அபோட், ஸ்காட்போலண்ட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனொலி, டிராவிஸ் ஹெட்(து.கே), ஜோஷ் இங்கிலிஸ்(வி.கீ), உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மாட் குஹ்னெமன், லாபுஷாக்னே, நாதன் லயன், நாதன் மெக்ஸ்வீனி, டோட் மர்பி, பியூ வெய்ட் மர்பி, மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.
The post இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய அணி கேப்டனாக ஸ்மித் நியமனம் appeared first on Dinakaran.