×

சாம்பியன்ஸ் கோப்பை தொடர்: இந்திய அணியில் முகம்மது ஷமி?

புதுடெல்லி: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி சேர்க்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் முடிந்த பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் போட்டிகளில் 3-1 என்ற கணக்கில் இந்தியாவை வென்று ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது. அந்த தொடரில் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு துணையாக சிறப்பாக பந்து வீசக்கூடிய முகம்மது சமியை சேர்த்திருக்கலாம் என்ற கருத்தை பலர் தெரிவித்தனர்.

இந்நிலையில், பாகிஸ்தானில் பிப்.19ம் தேதி துவங்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பைக்கான தொடரில் ஷமி சேர்க்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் இந்திய அணியில் சேர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சாம்பியன்ஸ் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் தற்காலிக பட்டியலை வரும் 12ம் தேதிக்குள் அனைத்து அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. எனவே, ஓரிரு நாளில் இது தொடர்பான அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post சாம்பியன்ஸ் கோப்பை தொடர்: இந்திய அணியில் முகம்மது ஷமி? appeared first on Dinakaran.

Tags : Champions Trophy Series ,Mohammed Shami ,New Delhi ,Champions Trophy cricket ,Australia ,India ,Border-Gavaskar Trophy Test ,Dinakaran ,
× RELATED சாம்பியன் டிராபி தொடருக்கான இந்திய...