×

எஸ்ஏ டி 20 தொடர் இன்று தொடக்கம்: சன்ரைசர்ஸ்-எம்.ஐ. கேப்டவுன் முதல் போட்டியில் பலப்பரீட்சை

கேப் டவுன்: இந்தியாவில் ஐபிஎல் போன்று தென் ஆப்ரிக்காவில் 6 அணிகள் பங்கேற்கும் எஸ்ஏ டி20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஐபிஎல் போட்டியிலிருந்து அண்மையில் ஓய்வுபெற்ற இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தற்போது டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணியில் இணைந்து இருக்கிறார்.

இந்த தொடரில் முதல் 2 சீசனிலும் சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் பட்டம் வென்றது. இந்நிலையில் 3வது சீசன் இந்திய நேரப்படி இன்று இரவு 9 மணிக்கு தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்- எம்ஐ (மும்பை இந்தியன்ஸ்) கேப்டவுன் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளிலும் முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ளன. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டு மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.

The post எஸ்ஏ டி 20 தொடர் இன்று தொடக்கம்: சன்ரைசர்ஸ்-எம்.ஐ. கேப்டவுன் முதல் போட்டியில் பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : SA D20 ,Sunrisers ,Cape Town ,SA T20 ,South Africa ,IPL ,India ,Dinesh Kartik ,David Miller ,Parl Royals ,Dinakaran ,
× RELATED பிரான்சில் புயல் தாக்கி 1000 பேர் பலி?