கான்பரா: இந்திய அணியின் முழு நேர கேப்டனாக பும்ரா செயல்பட முடியுமா என தெரியவில்லை. கோலி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்த பிறகு, இந்தியாவின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. மோசமான ஃபார்ம் காரணமாக, சிட்னியில் நடந்த கடைசி டெஸ்டில் இருந்து விலகும் பெரிய முடிவை ரோஹித் சர்மா எடுத்தார். அதே நேரத்தில் ஜஸ்பிரித் பும்ரா அந்த டெஸ்டில் அணியை வழிநடத்தினார்.
ஆனால் பணிச்சுமை காரணமாக, காயமடைந்து கடைசி இன்னிங்ஸில் பந்து வீச முடியாமல் போனது. ஜஸ்பிரித் பும்ராவின் உடற்தகுதியைப் பார்க்கும்போது, அவரை முழுநேர கேப்டனாக நியமிக்க வேண்டாம் என பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அடுத்த கேப்டன் யார் என்பதுதான் கேள்வி. இந்தக் கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆடம் கில்கிறிஸ்ட் பதிலளித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “இந்திய அணியின் முழு நேர கேப்டனாக பும்ரா செயல்பட முடியுமா என தெரியவில்லை. இந்திய அணியின் முழு நேர கேப்டனாக பும்ரா செயல்பட முடியுமா என தெரியவில்லை. தலைமைத்துவத்தில் மாற்றம் வேண்டுமா? பும்ரா முழுநேர கேப்டனாக இருக்க வேண்டுமா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. அது அவருக்கு சற்று சவாலாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். விராட் கோலியை மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என தெரிவித்தார்.
The post விராட் கோலி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை: ஆடம் கில்கிறிஸ்ட் appeared first on Dinakaran.