இந்நிலையில், ஃபுளோரிடாவில் நேற்று பேசிய டிரம்ப், அமெரிக்காவின் 51வது மாநிலமாக கனடாவை இணைப்பதற்கு தனது ஆட்சியில் அந்நாட்டிற்கு பொருளாதார ரீதியில் அழுத்தம் தரப்படும் என்று கூறினார். கனடா போன்றே அமெரிக்காவின் மறு எல்லையில் உள்ள மெக்சிகோவுக்கு எதிராகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவோரை தடுக்கவும், போதைப்பொருள் கடத்தலை ஒழிக்கவும் மெக்சிகோ அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரி விகிதங்களை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாகவும் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
The post அமெரிக்கா – கனடா இணைப்புக்கு மீண்டும் வலியுறுத்தல்: பொருளாதார ரீதியில் அழுத்தம் தரப்படும் என்று டிரம்ப் பேச்சு appeared first on Dinakaran.