×

பெண்ணிடம் நகை அபேஸ்

சேலம், ஜன.9: சேலம் அஸ்தம்பட்டி பள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர் விஜயா (40). இவர் நேற்றுமுன்தினம் சேலம் 5 ரோட்டில் இருந்து ஓமலூருக்கு அரசு பஸ்சில் சென்றார். கருப்பூர் அரசு இன்ஜினியரிங் கல்லூரி அருகே சென்ற போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கருப்பூர் போலீசில் புகார் அளித்தார். கூட்டநெரிசலை பயன்படுத்தி திருட்டு கும்பலை சேர்ந்தவர்கள் அபேஸ் செய்தார்களா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெண்ணிடம் நகை அபேஸ் appeared first on Dinakaran.

Tags : Salem ,Vijaya ,Pallakkadu ,Astampatti, Salem ,Omalur ,Salem 5th Road ,Karupur Government Engineering College ,
× RELATED ஜென்ம நட்சத்திரத்தில் என்னென்ன செய்யலாம்?