×

மரத்தில் கூடு கட்டிய விஷ கதண்டுகள் அழிப்பு

கெங்கவல்லி, ஜன. 9: கெங்கவல்லி அடுத்த புனல்வாசல் பகுதியை சேர்ந்தவர் விவசாயி அழகுமணி. இவரது தோட்டத்தில் மாட்டு கொட்டகை அருகில் உள்ள மரத்தில் விஷ கதண்டு வண்டுகள் கூடுகட்டியுள்ளது. வேலைக்கு வரும் தொழிலாளர்களை கடித்து அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து அழகுமணி கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் (பொ) அசோகன் தலைமையில் வந்த வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து விஷ கதண்டு வண்டு கூட்டை அழித்தனர்.

The post மரத்தில் கூடு கட்டிய விஷ கதண்டுகள் அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Kengavalli ,Azhugmani ,Funalvasal ,Azhugmani Kengavalli… ,Dinakaran ,
× RELATED ஆக்கிரமிப்பை அகற்றாமல் சென்டர் மீடியன் அமைப்பு