×

₹11.88 லட்சத்துக்கு மக்காச்சோளம் விற்பனை

கெங்கவல்லி, ஜன. 8: கெங்கவல்லி அடுத்த ஒதியத்தூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளம் ஏலம் நடைபெற்றது. கெங்கவல்லி சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 15 விவசாயிகள் மக்காச்சோளத்தை கொண்டுவந்தனர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த 7 வியாபாரிகள் கலந்துகொண்டனர். ஏலத்தில் மக்காச்சோளம் குவிண்டால் ₹2,358 முதல் ₹2,332 வரையிலும் ஏலம் போனது. ஒட்டு மொத்தமாக ஏலத்தில் 505.60 குவிண்டால் மக்காச்சோளம் ₹11.88 லட்சத்திற்கு விற்பனையானது என விற்பனை கூட மேற்பார்வையாளர் மணியரசன் தெரிவித்தார்.

The post ₹11.88 லட்சத்துக்கு மக்காச்சோளம் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Kengavalli ,Odiathur Agricultural Regulatory Sales Hall ,
× RELATED மரத்தில் கூடு கட்டிய விஷ கதண்டுகள் அழிப்பு