மேட்டூர், ஜன. 7: மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று விநாடிக்கு 828 கன அடியாக குறைந்தது. கடந்த 4 நாட்களில் அணையின் நீர்மட்டம் 2.13 அடி சரிந்துள்ளது.காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. ஓனேக்கல் காவிரில் 2வது நாளாக நீர்வரத்து விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக உள்ளது. அதேசமயம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று முன்தினம் விநாடிக்கு 1,307 கனஅடியாக இருந்த நிலையில் நேற்று விநாக்கு 828 கனஅடியாக சரிந்தது. நீர் வரத்து சரிந்த நிலையில், காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12,000 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 300 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் நேற்று முன்தினம் 118.52 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 117.87 அடியாக சரிந்தது. கடந்த 2ம்தேதி வரை 120 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், நேற்று 117.87 அடியாக சரிந்தது. நான்கு நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 2.13 அடி சரிந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 90.11 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணை நீர் இருப்பு நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி சரிந்து வருகிறது.
The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 828 கன அடியாக குறைந்தது appeared first on Dinakaran.