சாம்பியன் டிராபியில் ஆடும் அணிகள் வீரர்கள் பட்டியலை அறிவிக்க வரும் 12ம் தேதி கடைசி நாளாகும். அதன்படி இந்திய அணியின் தேர்வு குழுவினர் வரும் 12ம் தேதி மும்பையில் கூடி அணியை அறிவிக்க உள்ளனர். ரோகித்சர்மா அணியின் கேப்டனாக தொடர்வார் என்பது உறுதியாகி உள்ளது. பும்ரா துணை கேப்டனாக நியமிக்கப்படலாம். காயத்தில் இருந்து மீண்டு உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி தனது உடற்தகுதியை நிரூபித்த மூத்த வீரர் முகமது ஷமி மீண்டும் அணிக்கு திரும்புவார். முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் வேகப்பந்துவீச்சாளர்களாக இடம்பெறுவர். பேட்டிங்கில் விராட்கோஹ்லி, சுப்மன்கில், ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் அய்யர் இடம்பெறுவர்.
விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பன்ட், கே.எல்.ராகுலும், ஆல்ரவுண்டர்களாக ஹர்திக்பாண்டியா, அக்சர் பட்டேல், ஜடேஜா ஆகியோரும் அணியில் இடம்பிடிக்கலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. 12ம் தேதிக்குள் அணியை அறிவித்தாலும் பிப்.13ம்தேதி வரை ஐசிசியுடன் அனுமதி பெற்று மாற்றம் செய்து கொள்ளலாம். சாம்பியன் டிராபி தொடருக்கான அணியின் அறிவிப்பின் போது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள 5 டி.20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிக்கான அணியும் அறிவிக்கப்படுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான டி.20 அணியில் இளம்வீரர்கள் இடம்பெறுவர். ஒருநாள் போட்டிக்கான அணியில் பும்ராவுக்குமட்டும் ஓய்வு அளிக்கப்படலாம்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய உத்தேச அணி: ரோகித் சர்மா (கே), சுப்மன் கில், ஜெய்ஸ்வால், விராட் கோஹ்லி, ஷ்ரேயாஸ்அய்யர், கே.எல் ராகுல் (வி.கீ, ரிஷப் பன்த் (வி.கீ), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் படேல், , ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி.
The post சாம்பியன் டிராபி தொடருக்கான இந்திய அணி 12ம் தேதி அறிவிப்பு: முகமதுஷமி, குல்தீப் இடம்பெற வாய்ப்பு appeared first on Dinakaran.