×

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.. 3 மாதங்களில் நடவடிக்கை: சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி விளக்கம்..!!

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 3 மாதங்களுக்குள் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை 2025ன் முதல் கூட்டத்தொடரின், மூன்றாம் நாள் கூட்டம் இன்று தொடங்கியது. அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர். அதேபோல டங்ஸ்டன் தடுப்போம், மேலூரை காப்போம் என்ற வாசகம் அடங்கிய முகக்கவசத்தை அதிமுக உறுப்பினர்கள் அணிந்து வந்ததை பார்க்க முடிந்தது.

இதையடுத்து சட்டப்பேரவையில் கேள்வி நேரம் தொடங்கியது. உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர்; திண்டுக்கல் மாவட்டத்தில் 5.27 லட்சம் பேர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பம் பெறப்பட்டது. 5.27 லட்சம் பேரில் 4 லட்சத்துக்கு அதிகமானோருக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. திட்ட விதிகளுக்கு யாரும் விடுபடாத வகையில் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுவரை 1.63 கோடி பேர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு விண்ணப்பித்தனர். நாமக்கல் மாவட்டத்தில் 2.54 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் 67 சதவீதம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் திட்டம் தகுதியானவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 3 மாதங்களுக்குள் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யாருக்கும் விடுபடாமல் எப்படி மகளிர் உரிமைத் தொகை வழங்க முடியுமோ அப்படி வழங்கி வருகிறோம். எவ்வளவு பேருக்கு கூடுதலாக வழங்க முடியுமோ விதிகளுக்கு உட்பட்டு அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி கூறியுள்ளார்.

The post கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.. 3 மாதங்களில் நடவடிக்கை: சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி விளக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi ,Chennai ,Udhayanidhi Stalin ,Legislative Assembly ,Tamil Nadu Legislative Assembly 2025 ,Deputy ,Chief Minister ,Dinakaran ,
× RELATED தங்கைகளுக்கு என் அன்பும், வாழ்த்தும்:...