- சென்னை
- பிரதி தலைமை நிர்வாக அதிகாரி
- உதயநிதி ஸ்டாலின்
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- திருவிழா
- துணை தலைவர்
- தின மலர்
சென்னை: சமையல் என்பது சாதாரண விஷயம் அல்ல, ஒரு குடும்பத்தில் இருப்பவர்களை திருப்தி படுத்த சமைப்பதே பெரிய சவாலான விஷயம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழாவில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சென்னையில் நடந்த உணவுத் திருவிழா மக்களின் பாராட்டை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த உங்களது தன் நம்பிக்கைக்கும், ஒற்றுமைக்கும் கிடைத்த வெற்றி மற்றும் அங்கீகாரம். சமையல் என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. ஒரு குடும்பத்திற்கு சமைத்து அவர்களை திருப்திப்படுத்தவே கஷ்டம்.
ஆனால் சென்னையில் நடந்த உணவுத் திருவிழாவில் ஒரு லட்சம் குடும்பத்திற்கு நீங்கள் சமைத்து உணவு கொடுத்து மக்களிடம் பாராட்டுகளை பெற்று இருக்கிறீர்கள். மெரினாவில் கடல் அலையைவிட உணவுத் திருவிழாவில் மக்களின் கூட்டம் அதிகம் இருந்ததை பார்க்க முடிந்தது. மகளிர் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு மிக மிக முக்கிய இடத்தில் உள்ளது. அதனால்தான் நமது திராவிட மாடல் அரசு மகளிருக்கு என்று புதுமைப் பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை என ஏராளமான திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. சென்னையில் நடந்த உணவுத் திருவிழாவில் ரூ.1.55 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளோம். உணவுத் திருவிழாவில் 5 நாட்களில் மூன்றரை லட்சம் மக்கள் உணவை சுவைத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
The post சென்னையில் நடந்த உணவுத் திருவிழாவில் ரூ.1.55 கோடி வருவாய் ஈட்டி சாதனை; துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.