×

போலீசார் தாக்கி இறந்தவரின் மனைவிக்கு ரூ.8 லட்சம் இழப்பீடுதர அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: போலீசார் தாக்கி இறந்தவரின் மனைவிக்கு ரூ.8 லட்சம் இழப்பீடுதர அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2010 ஏப். 4-ல் கோயில் விழாவில் மதுபோதையில் செந்தில்குமார் தகராறில் ஈடுபட்டதாக, வடமதுரை போலிஸ் கைது செய்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறைக்கு அழைத்துச் சென்ற போது உடல் நலக்குறைவால் செந்தில்குமார் வழியிலேயே உயிரிழந்தார். போலீஸ் தாக்கிதான் தனது கணவர் இறந்தார்; சம்பந்தப்பட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி மனைவி மனு தாக்கல் செய்துள்ளார்.

The post போலீசார் தாக்கி இறந்தவரின் மனைவிக்கு ரூ.8 லட்சம் இழப்பீடுதர அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : State Human Rights Commission ,Chennai ,North Madurai ,Senthilkumar ,Dinakaran ,
× RELATED பெண் தலைமைக் காவலருக்கு எதிராக மனித...