×

பெண் தலைமைக் காவலருக்கு எதிராக மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்!!

சென்னை : பேருந்து நிலையத்தில் பெண்களை கிண்டல் செய்த வழக்கில் கைதான இளைஞரை தாக்கியதாக, பெண் தலைமைக் காவலர் ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. திருச்சி பேருந்து நிலையத்தில் பெண்களை கேலி செய்ததாக பிரபு என்பவரை மகளிர் போலீசார் கைது செய்தனர். பின்னர் காவல் நிலைய பிணையில் வெளியே வந்த அவர், தன்னை கைது செய்த பெண் காவலர் ஹேமலதா உள்ளிட்ட போலீசார் தாக்கியதாக மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரித்த மனித உரிமை ஆணையம் பிரபுவுக்கு ஹேமலதா ரூ.30,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டிருந்தது.

மனித உரிமை ஆணைய உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமைக் காவலர் ஹேமலதா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது,மனுதாரர் பிரபு காயம் அடைந்ததற்கான ஆதாரம் எதையும் தாக்கல் செய்யவில்லை என்று ஐகோர்ட் கருத்து தெரிவித்தது. மேலும் பெண் காவலர் உள்நோக்கத்துடன் செயல்பட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்த நிலையில், பெண் தலைமைக் காவலர் ஹேமலதா, பிரபுவுக்கு ரூ. 30,000 இழப்பீடு வழங்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

The post பெண் தலைமைக் காவலருக்கு எதிராக மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்!! appeared first on Dinakaran.

Tags : High Court ,Human Rights Commission ,Chennai ,State Human Rights Commission ,
× RELATED மனித உரிமைகள் ஆணைய தலைவராக நியமனமா?...