×

2024ம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருது தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தேர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 15ம் தேதி வழங்குகிறார்

சென்னை: தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: பெருந்தலைவர் காமராசர் விருது 2006ம் ஆண்டு முதல் வழங்கப் பெற்று வருகிறது. இதுவரை 18 அறிஞர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அவ்வரிசையில் 2024ம் ஆண்டுக்கான விருதுக்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், தமிழக காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளராகவும், கட்சி தலைவராகவும் ஒன்றிய இணை அமைச்சராகவும், ஒரு முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியதோடு 50 ஆண்டு காலமாக பொது வாழ்வில் ஈடுபட்டுவரும் கே.வி.தங்கபாலு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பெருந்தலைவர் காமராஜர் விருது பெறும் விருதாளருக்கு விருது தொகையாக ரூபாய் இரண்டு லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பெறுவார். இவ்விருது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் திருவள்ளுவர் திருநாளான வருகிற 15ம் தேதி அன்று சென்னையில் வழங்கப்பட உள்ளது.

The post 2024ம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருது தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தேர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 15ம் தேதி வழங்குகிறார் appeared first on Dinakaran.

Tags : President ,Tamil Nadu Congress ,K. V. Tangabalu ,Principal ,M.U. K. Stalin ,Chennai ,Government of Tamil Nadu ,All India Congress Party ,Tamil ,President of ,K. V. Tangabalu Exam ,
× RELATED ஜனநாயக முறையில் போராட அனுமதிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை