×

மாநகர சாலைகளில் கட்டுப்பாடின்றி திரிந்தால் கால்நடை உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் எச்சரிக்கை

 

தூத்துக்குடி,ஜன.6: தூத்துக்குடி மாநகரில் உள்ள சாலைகளில் கட்டுப்பாடின்றி கால்நடைகள் சுற்றித்திரிந்தால் அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாநகரத்தின் முக்கிய வீதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக அலைந்து திரியும் கால்நடைகளை வளர்ப்போர் தங்களுக்கு சொந்தமான இடங்களில் கொட்டில் அமைத்து பராமரிக்குமாறு மாநகராட்சி சார்பில் பல தடவை அறிவிப்புகள் செய்யப்பட்டது. ஆனாலும் தற்போது மாநகரின் பிரதான சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிகிறது. இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு சாலைகளில் சுற்றித்திரிந்த 24 மாடுகளை பிடித்தனர். மேலும் அதன் உரிமையாளர்களிடமிருந்து ரூ.80 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் கூறுகையில் ‘‘கால்நடை வளர்ப்போர் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் கொட்டில் அமைத்து முறையாக பராமரிக்குமாறு மாநகராட்சி சார்பில் மீண்டும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலை தொடருமாயின் அபராத தொகை கூடுதலாக விதிப்பதோடு, கால்நடையின் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரித்துள்ளார்.

The post மாநகர சாலைகளில் கட்டுப்பாடின்றி திரிந்தால் கால்நடை உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Municipal Commissioner ,Madhubalan ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED நிலுவை வரிகளை செலுத்தாமல் விட்டால் ஜப்தி நடவடிக்கை