×

சிக்னல் பழுதால் விபத்து அபாயம்

 

நரசிங்கபுரம், ஜன.6: ஆத்தூர் நகர பகுதியில், ரவுண்டானா சாலை முக்கிய சாலை என்பதால் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இந்த சிக்னல் இயங்காமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்த ரவுண்டானா பகுதியில் நாள்தோறும் 1000க்கும் மேற்பட்ட டூவீலர்கள், பஸ்கள், கனரக வாகனங்கள், பள்ளி வாகனங்கள் கடந்து செல்கின்றனர். அதேபோல் நடந்து செல்பவர்கள் சாலையை கடக்க முடியாமல் அவதிபடுகின்றனர். பள்ளி நேரங்களில் அதிகளவில் போக்குவரத்து ஏற்பட்டு விபத்து நேரிடும் அபாயம் உள்ளது. இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் அதிவேகமாக செல்வதால் நாள்தோறும் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, பழுதடைந்த சிக்னலை மாற்றி, காலை மாலை நேரங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post சிக்னல் பழுதால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Tags : Narasinghapuram ,Athur ,Dinakaran ,
× RELATED நரசிங்கபுரம் நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு