இந்திய கிரிக்கெட் வீரரான சாஹல் – தனஸ்ரீ ஜோடி விவாகரத்து..? உணர்ச்சிகரமான பதிவு வைரல்

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரரான சாஹல் – தனஸ்ரீ ஜோடி விவாகரத்து செய்ய உள்ளதாக கூறப்படும் நிலையில், சாஹல் வெளியிட்ட உணர்ச்சிகரமான பதிவு வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான யுஸ்வேந்திர சாஹலுக்கும், அவருடைய மனைவியும் மருத்துவர் மற்றும் நடன இயக்குநருமான தனக்கும் கடந்த 2020ல் திருமணம் நடந்தது. ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. இந்நிலையில், இருவரும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் ஒருவரையொருவர் பின்தொடரவில்லை எனக் கூறப்படுகிறது.

குறிப்பாக, சாஹல் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தனஸ்ரீயுடன் இருக்கும் படங்களை நீக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், தனஸ்ரீ சாஹலுடன் இருக்கும் படங்களை (தற்போதுவரை) நீக்கவில்லை. அதேநேரத்தில், அவரைப் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார். இதையடுத்து இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. அப்போது பதிலளித்த சாஹல், இதை மறுத்துப் பேசினார். மேலும் தனயுடனான தனது உறவு குறித்து வதந்திகளை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்று தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டார். இந்நிலையில் சாஹல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘கடின உழைப்பு மக்களின் குணாதிசயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. உங்கள் பயணம் உங்களுக்குத் தெரியும். உங்கள் வலிகள் உங்களுக்குத் தெரியும். இங்கு வருவதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். உலகுக்குத் தெரியும்.

நீங்கள் தலை நிமிர்ந்து நிற்கிறீர்கள். உங்கள் வியர்வை சிந்தி உழைத்தீர்கள். உங்கள் தந்தையையும் தாயையும் பெருமைப்படுத்துங்கள், எப்போதும் ஒரு பெருமைமிக்க மகனைப் போல நிமிர்ந்து நிற்கவும்’ என குறிப்பிட்டுள்ளார். இந்த உணர்ச்சிகரமான பதிவு சாஹல் – தனஜோடி விவாகரத்து செய்திகளுக்கு மத்தியில் வெளியாகி, ஊகங்களை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சாஹலும் தனயும் பிரிந்து செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post இந்திய கிரிக்கெட் வீரரான சாஹல் – தனஸ்ரீ ஜோடி விவாகரத்து..? உணர்ச்சிகரமான பதிவு வைரல் appeared first on Dinakaran.

Related Stories: