- அம்பேத்கர்
- புது தில்லி
- பாஜா
- அகத்ஸி
- அம்பேத்கர் திருவிழா
- அரசியலமைப்புச் சட்டம் குறித்த பாராளுமன்ற
- பாஜக
- தின மலர்
புதுடெல்லி:அரசியல் சட்டத்தை கொண்டாடும் வகையில் 2 வார பிரசார இயக்கத்தை பாஜ கட்சி மேற்கொள்கிறது. இதையொட்டி மாநில தலைநகரங்கள் உள்ளிட்ட 50 நகரங்களில் அம்பேத்கர் விழாவை கொண்டாட அக்கட்சி முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அரசியலமைப்புச் சட்டம் மீதான விவாதத்தின்போது பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ‘‘இன்றைய சூழலில் அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்துவது, ஒரு பேஷன் ஆகிவிட்டது. அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்… இந்த அளவுக்கு கடவுளின் பெயரைப் பயன்படுத்தினால், ஏழு பிறவிகளுக்கும் நாம் சொர்க்கத்தை அடையலாம்’’ என்றார்.அவரது பேச்சு சர்ச்சையானது. அம்பேத்கரை அவமதித்ததற்காக அமித் ஷா மன்னிப்பு கேட்க கோரிக்கை விடுத்து காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. பாஜ அரசியல் சட்டத்தை மதிப்பது இல்லை என்றும் அரசியல் சட்டத்தை மாற்ற முயற்சிக்கிறது என பாஜ மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இந்த நிலையில், அரசியல் சட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் அதை உருவாக்கிய அம்பேத்கரின் புகழ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,11ம் தேதி முதல் 2 வார பிரசாரத்தை பாஜ தொடங்க உள்ளது. அரசியல் சட்ட கவுரவ பிரசார இயக்கம் என பெயரிடப்பட்டுள்ள இயக்கத்தையொட்டி மாநில தலைநகரங்கள் உள்பட 50 நகரங்களில் பிரசாரம் நடைபெறும். இந்த பிரசார இயக்கத்துக்கு கட்சி பொது செயலாளர்கள் வினோத் தாவ்டே,தருண் சுக் மற்றும் துஷ்யந்த் கவுதம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
The post அம்பேத்கரின் புகழை பரப்புவதற்கு மாநில தலைநகரங்களில் பிரசாரம்: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டால் பாஜ முடிவு appeared first on Dinakaran.