டாக்கா: வங்கதேசத்தை சேர்ந்த 50 நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமி மற்றும் மாநில நீதித்துறை அகாடமியில் பிப்ரவரி 10ம் தேதி முதல் பயிற்சி பெறுவார்கள். இதற்கான முழு செலவுகளையும் இந்திய அரசே ஏற்கும்” என அறிவிக்கப்பட்டிருந்தது. இது இந்தியா – வங்கதேச உறவில் ஒரு முன்னேற்றமாக கருதப்பட்டது.
இந்நிலையில் வங்கதேச நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கும் திட்டத்தை ரத்து செய்து யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அறிவித்துள்ளது. வங்கதேச உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக டெய்லி ஸ்டார் நாளிதழ் செய்தி வௌியிட்டுள்ளது.
The post வங்கதேச நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கும் திட்டம் ரத்து: இடைக்கால அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.