×

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் மணிக்கு 180 கிமீ வேகத்தை எட்டி சாதனை

புதுடெல்லி: தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் வேகம் குறித்த சோதனைகள் கடந்த மூன்று நாட்களாக நடந்தன. ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இருந்து லபான் ரயில் நிலையம் வரை உள்ள 30 கிமீ மற்றும் ரோகல் குர்த் மற்றும் கோட்டா இடையேயான 40 கிமீ தூரத்துக்கு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் சோதனை ஓட்டம் நடந்தது. இந்த சோதனையின் போது 180 கி.மீ வேகத்தை ரயில் எட்டியுள்ளது. ரயில் பயணிகளுக்கு நீண்ட தூர பயணத்திற்கான உலகத்தரம் வாய்ந்த பயணம் கிடைக்க இந்த மாத இறுதி வரை இந்த சோதனைகள் தொடரும் என்று ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது குறித்த வீடியோ ஒன்றை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் வந்தே பாரத் ரயிலுக்குள் தண்ணீர் நிரப்பப்பட்ட கண்ணாடி குவளை வைக்கப்பட்டுள்ளது. ரயில் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் சென்ற போதும், தண்ணீர் ஆடாமல் இருக்கிறது.இது அதிவேக ரயில் பயணத்தில் பயணிகளுக்கான வசதிகளை வெளிப்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.

The post வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் மணிக்கு 180 கிமீ வேகத்தை எட்டி சாதனை appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Bharat ,Rajasthan ,Kota ,Laban Railway Station ,Rokal Kurth ,Dinakaran ,
× RELATED டிரோன் எதிர்ப்பு வெடிபொருள் தயாரிக்க விண்ணப்பம் வரவேற்பு