×

சினிமா படப்பிடிப்பிற்கு வந்த கங்கை அமரனுக்கு உடல்நலம் பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி

சிவகங்கை: சிவகங்கை அருகே படப்பிடிப்பில் பங்கேற்க வந்த கங்கை அமரன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டார். சிவகங்கை மற்றும் மானாமதுரை பகுதிகளை சுற்றி பிரபல சினிமா நிறுவனம் எடுத்து வரும் திரைப்படத்தில், இசையமைப்பாளர் கங்கை அமரன் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க நேற்று மானாமதுரை வந்திருந்தார்.

அப்போது கங்கை அமரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து முதலுதவி சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

 

The post சினிமா படப்பிடிப்பிற்கு வந்த கங்கை அமரனுக்கு உடல்நலம் பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Gangai Amaran ,Sivaganga ,Madurai ,Manamadurai ,Gangai Amaran… ,
× RELATED மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து...