×

சாம்பியன்ஸ் கோப்பை தொடர்; ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக்க திட்டம்: பிசிசிஐ ஆலோசனை


சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். ரோகித் சர்மா தொடர்ந்து மோசமாக ஆடி வந்ததால் அவர் இந்த போட்டியில் சேர்க்கப்படவில்லை. எனினும் ரோகித் சர்மா, ஓய்வை தேர்வு செய்திருப்பதாக விளக்கம் அளித்துள்ளார். இந்த தருணத்தில் ரோகித் சர்மாவுக்கு தற்போது 38 வயது ஆகிறது. இதனால் அவர் இன்னும் எவ்வளவு காலம் விளையாடுவார் என தெரியவில்லை. ஏற்கனவே அவர் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது டெஸ்ட் போட்டியிலும் அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இதன் காரணமாக வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனால் விராட்கோஹ்லி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதேபோல் ரோகித் சர்மாவும் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு இந்திய அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமிக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளது. சூர்யகுமார் யாதவ், ஏற்கனவே டி20 அணியின் கேப்டனாக உள்ள நிலையில் அவர் ஒரு நாள் கிரிக்கெட்டில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் அவர் ஒரு நாள் அணியில் சேர்க்கப்படுவதில்லை. இதுபோன்று சுப்மன் கில் இந்திய அணியின் துணை கேப்டனாக இருக்கிறார். ஆனால் கில், சாம்பியன்ஸ் கோப்பை போன்ற பெரிய தொடரில் இந்திய அணியை வழி நடத்துவதற்கான அனுபவத்தை இன்னும் பெறவில்லை.

மேலும் அவரது பார்மும் கேள்விக்குறியாகி இருக்கிறது. இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது. இதேபோன்று ரிஷப்பன்டும் கேப்டன் பதவிக்கான போட்டியில் இருக்கிறார். டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட பும்ராவுக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கேப்டன் என்ற அங்கீகாரத்தை வழங்கலாமா என்ற யோசனையிலும் பிசிசிஐ இருக்கிறது. இதனால் ஆஸ்திரேலியா தொடர் முடிவடைந்த உடன் ரோகித் சர்மாவிடம் இதுபற்றி பேசி தேர்வு குழு உரிய முடிவை விரைவில் எடுக்கும் என தெரிகிறது. சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பு நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோஹ்லி, ரோகித் சர்மா, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post சாம்பியன்ஸ் கோப்பை தொடர்; ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக்க திட்டம்: பிசிசிஐ ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Champions Cup Series ,Hardik Pandya ,BCCI ,Sydney ,Rokit Sharma ,Australia ,PCCI ,Dinakaran ,
× RELATED வினோத் காம்ப்ளி கடும் பொருளாதார நெருக்கடியால் அவதிப்படுவதாக தகவல்!