சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நீர்வளத்துறை ரீதியான ஆய்வு கூட்டம்

சென்னை: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற துறை ரீதியான ஆய்வு கூட்டத்தில் 2021-2022 முதல் 2024-2025 வரையிலான ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நிலுவையிலுள்ள பணிகளை விரைந்து முடித்திட மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். மேலும், காவிரி வடிநில பகுதிகளிலுள்ள பாசனக் கால்வாய்களில் மேற்கொள்ளப்படவுள்ள சிறப்பு தூர்வாரும் பணிக்கான மதிப்பீடுகளை விரைந்து தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தினார்.

2025-2026-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள புதியப் பணிகள் குறித்து பொறியாளர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், நீர்வளத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், காவிரி தொழில்நுட்ப குழுமத் தலைவர் ஆர்.சுப்பிரமணியன், நீர்வளத்துறையின் அரசு சிறப்புச் செயலாளர் திரு.சு.ஸ்ரீதரன், நீர்வளத்துறையின் முதன்மைத் தலைமைப் பொறியாளர் திரு.சா.மன்மதன் மற்றும் அனைத்து மண்டலத் தலைமைப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நீர்வளத்துறை ரீதியான ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: