×

யூடியூபர் வாசன் வீட்டில் ரெய்டு


கோவை: கோவை மாவட்டம் காரமடை அடுத்துள்ள வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் யூடியூபர் டிடிஎப் வாசன் (24). இவர் மோட்டார் சைக்கிள்களை அதிவேகமாக ஓட்டி அந்த வீடியோக்களை யூடியூபில் வெளியிட்டு ரசிகர்களை பின் தொடர வைத்துள்ளார். மேலும், இவர் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்து அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதும் வழக்கம். இதனால், பலமுறை இவரை நீதிமன்றமும் கண்டித்துள்ளது. இந்நிலையில், டிடிஎப் வாசன் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மலைப்பாம்பை கையில் வைத்து கொண்டு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அந்த வீடியோவில், தான் அந்த மலைப்பாம்பை உரிமம் பெற்று வளர்த்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. டிடிஎப் வாசன் தற்போது சென்னையில் வசித்து வரும் நிலையில் சென்னை வனத்துறையினர் இது குறித்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், டிடிஎப் வாசனின் சொந்த ஊரான கோவை வெள்ளியங்காட்டில் நேற்று காரமடை வனத்துறையினர் நேரில் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

The post யூடியூபர் வாசன் வீட்டில் ரெய்டு appeared first on Dinakaran.

Tags : Raid ,YouTuber Vasan ,Coimbatore ,YouTuber ,DTF Vasan ,Velliangadu ,Karamadai ,YouTube ,
× RELATED முதல்வர் குறித்து அவதூறு வீடியோ...