×

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜன.13 அன்று கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜன.13 அன்று கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற சிவாலய தலங்களில் ஒவ்வொரு ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் கொண்டாடப்படுவது வழக்கம். மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திரம் அன்று சேந்தனார் வீட்டுக்கு சிவன் பெருமான் களி உண்ண சென்ற தினத்தையே ஆருத்ரா தரிசன விழாவாக கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடக்கும் நிலையில், ஜன.13 அன்று கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறையும் சேர்ந்து வருவதால் தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 01-02-2025 சனிக்கிழமை அன்று வேலை நாளாக செயல்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

The post சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜன.13 அன்று கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Cuddalore district ,Aruthra Darshanam ,Chidambaram Nataraja Temple ,Cuddalore ,Shiva ,Anith Thirumanjana Darshanam festival ,Ani month ,Aruthra Darshanam festival ,Margazhi month… ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா...