சென்னை: வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் வகிப்பதாக ஒன்றிய அரசு பாராட் டியுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் 40 மாதங்களில் 1666 புதிய நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. ரூ.100 கோடி மதிப்பீட்டில் 230 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இந்தியாவிலேயே அதிகமான நெல் சேமிப்பு கிடங்குகள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. இந்தியாவிலேயே அதிகமான நெல் சேமிப்புக் கிடங்குகள் அமைத்த தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு முதல் பரிசு வழங்கியுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் வகிப்பதாக ஒன்றிய அரசு பாராட்டு..!! appeared first on Dinakaran.