சென்னை: அண்ணா பல்கலை. விவகாரத்தில் ஜனநாயக முறையில் போராட அனுமதிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். போராட்டங்களில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை கூட போலீசார் கைது செய்தனர். அண்ணா பல்கலை. வன்கொடுமை சம்பவத்தை அரசியலாக்க முற்படுகின்றனர் என அவர் தெரிவித்தார்.