ஒன்றிய அரசின் பாரபட்சத்தால் கடன் வாங்கும் நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது: பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

விழுப்புரம்: விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன்அளித்த பேட்டி:பொள்ளாச்சி சம்பவம் கொடூரமாக நடந்தது அப்போது அதிமுக ஏன் ஆர்பாட்டம் நடத்தவில்லை. கடைசிவரை இந்த வழக்கில் குற்றவாளிகளை கைதுசெய்யவில்லை. அண்ணாபல்லைக்கழக சம்பவத்தில் 10 மணி நேரத்தில் குற்றவாளியை காவல்துறை கைது செய்துள்ளது.

பெஞ்சல் புயல்பாதிப்புக்கு ஒன்றிய அரசிடம் கேட்ட தொகையை இதுவரை வழங்கவில்லை. தேசிய கல்விகொள்கையை அமல்படுத்தவில்லை என்று கல்விக்கு ஒதுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை. அதனால் ஆசிரியர்களுக்கு சம்பளம் இல்லை என்று சொல்லமுடியாது. ஒன்றியஅரசின் பாரபட்சமான போக்குதான் தமிழக அரசு கடன் வாங்குவதற்கும், திட்டங்களை நிறைவேற்ற முடியாததற்கும் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஒன்றிய அரசின் பாரபட்சத்தால் கடன் வாங்கும் நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது: பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: