சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற பாமகவை சேர்ந்த சவுமியா அன்புமணி உட்பட 191 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் பலாத்காரத்தை கண்டித்து பாமக சார்பில் மகளிர் அணியினர் வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி உள்பட் 40 பெண்கள் என மொத்தம் 191 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர் அனைவரையும் போலீசார் அருகில் உள்ள சமுதாய நல கூடத்தில் அடைத்து வைத்து, பிறகு மாலை அனைவரையும் போலீசார் விடுவித்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் வள்ளுவர் கோட்டம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.
The post வள்ளுவர் கோட்டம் அருகே தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி உட்பட 191 பேர் கைது appeared first on Dinakaran.