×

வைக்கத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு புதிய பஸ்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

சென்னை: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் வைக்கத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு புதிய வழித்தடப் பேருந்து இயக்கத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: கோட்டயம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பிரான்சிஸ் ஜார்ஜ் அளித்த கோரிக்கைகளின் அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று கேரளா மாநிலம் வைக்கத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு புதிய வழித்தடத்தை தொடங்கி வைத்தார்.

கேரளா மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.பி.கணேஷ் குமார் மற்றும் கோட்டயம் பாராளுமன்ற உறுப்பினர் பிரான்சிஸ் ஜார்ஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வைக்கம் எம்எல்ஏ ஆஷா, கேரள போக்குவரத்துக் கழக தலைமை நிர்வாக இயக்குநர் பிரதீப் குமார், தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குநர் மோகன், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த புதிய பேருந்தின் வழித்தடம் வைக்கம், கோட்டயம், சங்கனாச்சேரி, புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, இராஜபாளையம், மதுரை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டிணம் வழியாக வேளாங்கண்ணிக்கு தினசரி இயக்கப்படுகிறது. வைக்கத்தில் இருந்து வேளாங்கண்ணி மாலை 4 மணிக்கு புறப்படும் வேளாங்கண்ணியில் இருந்து வைக்கத்திற்கு மாலை 4.30 மணிக்கு புறப்படும். இந்த வசதியினை பயணிகள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

The post வைக்கத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு புதிய பஸ்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Vaikom ,Velankanni ,Minister ,Sivashankar ,Chennai ,Transport Minister ,Government Express Transport Corporation ,Managing Director ,Kottayam Parliament… ,Dinakaran ,
× RELATED மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க...