×

ஆவின் நிறுவனம் நாள்தோறும் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து சாதனை

சென்னை: ஆவின் நிறுவனம் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள 27 ஒன்றியங்கள் மற்றும் சென்னை மெட்ரோ மூலமாக சுகாதாரமான முறையில் தரம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு பால் மற்றும் பால் உபப்பொருட்களை தயாரித்து நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த 2019-20ம் ஆண்டில் சுமார் 23 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் பால் விற்பனையை, அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கையின் காரணமாக 2024-25ல் சுமார் 7 லட்சம் லிட்டருக்கு மேல் அதிகரித்து தற்போது நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் விற்பனை செய்து வருகிறது. பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை அரசு கனிவுடன் பரிசீலனை செய்து, 2023ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி முதல் ஆவின் கூட்டுறவு சங்கத்திற்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு, லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 உற்பத்தி ஊக்கத்தொகையாக பிரதம சங்கங்களின் மூலம் நிலுவையின்றி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை, நலச்சங்கத்தின் கோரிக்கையின்படி, மாவட்ட ஒன்றியத்தில் இருந்து பால் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அரசு அறிவித்த ரூ.3 ஊக்கத்தொகை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலம் இந்த பணி ஜனவரி 2025 முதல் வாரத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் இந்த நடைமுறையை அமல்படுத்தும் விதமாக அரசு அறிவித்த லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 ஊக்கத்தொகை மாவட்ட ஒன்றியத்தில் இருந்து பால் வழங்கிய சங்க உறுப்பினர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட உள்ளது.

The post ஆவின் நிறுவனம் நாள்தோறும் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து சாதனை appeared first on Dinakaran.

Tags : Aavin ,Chennai ,Tamil Nadu government ,Tamil Nadu ,Metro ,
× RELATED பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு...