சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் மனைப்பிரிவுகளுக்கான அனுமதி மற்றும் கட் டிட அனுமதி ஆகியவற்றை எளிதில் பெறும் வகையில், ஒற்றைச்சாளர முறையிலான இணையதளம் பயன்பாட்டில் உள்ளது. ஒற்றைச்சாளர முறையில் சுயசான்று அடிப்படையாக கொண்டு கட்டிட அனுமதி பெறும் வகையில் ஒருங்கிணைந்த கட்டணத்தை நிர்ணயம் செய்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 2,500 சதுர அடி நிலத்தில், 3,500 சதுர அடி நிலப்பரப்பு அளவிற்கு குடியிருப்புகள் கட்ட சுய சான்று முறையில் கட்டட அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கான புதிய திட்டம், கடந்த ஜூலையில் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தை மேலும் எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறவளர்ச்சி துறை ஈடுபட்டது. நிர்வாக ரீதியாக இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தும் போது, அதுகுறித்த நடை முறை விதிகள், கட்டணங்கள் அடங்கிய தீர்மானம், அந்தந்த உள்ளாட்சி அமைப் புகளில் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற சூழலில் கடந்தாண்டு நவம்பர் மாதம் 5ம் தேதிக்குள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஊரக வளர்ச்சி துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புதிய விதிமுறைகளின் கீழ் குடியிருப்பு கட்டிடம் கட்ட உடனடி பதிவின் மூலம் அனுமதியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
அதற்கான கட்டணங்களை சீரமைத்தும், சுயசான்று கட்டிட அனுமதி வழங்கும் வகையில் ஊராட்சிகளை A,B,C,D பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள சென்னை பெருநகர நகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ) எல்லைக்குள் 78 ஊராட்சிகள், நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள சி.எம்.டி.ஏ.எல்லைக் குள் இல்லாத 612 ஊராட்சிகள், சி.எம்.டி.ஏ. எல்லைக்குட்பட்ட இதர ஊராட்சிகள் 44 மற்றும் இந்த 3 வகைப்பாட்டுக்குள் இல்லாத இதர ஊராட்சிகள் 11,791 என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த பிரிவுகளின் அடிப்படையில் தற்போது ஒருங்கிணைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் பிரிவில் வரும் ஊராட்சிகளுக்கு ஒரு சதுர அடிக்கு ரூ.27 கட்டணமும், 2வது பிரிவில் வரும் ஊராட்சிகளுக்கு ஒரு சதுரடிக்கு ரூ.25 கட்டணமும், 3ம் பிரிவில் இடம் பெறும் ஊராட்சிகளுக்கு ஒருசதுரடிக்கு ரூ.22 கட்டணமும், 4ம் பிரிவில் வரும் இதரஊராட்சிகளுக்கு ஒருசதுரடிக்கு ரூ. 15ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வணிக கட்டிடங்களுக்கு இந்த நான்கு பிரிவுகளுக்கு முறையே ரூ.32, ரூ.30, ரூ.26 மற்றும் ரூ.18 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழில் நிறுவனங்களுக்கு முறையே, ரூ.43. ரூ.40, ரூ.35 மற்றும் ரூ.24 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணங்கள் கட்டிட தொழிலாளர் நல நிதி நீங்கலாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post மனை மற்றும் கட்டிட அனுமதி பெறுவதற்கு ஒருங்கிணைந்த கட்டணம் நிர்ணயம்: ஊரக வளர்ச்சி துறை தகவல் appeared first on Dinakaran.