- கன்னியாகுமாரி
- பாலசுப்பிரமணியம்
- முசிறி
- திருச்சி மாவட்டம்
- முருகுந்தரம்
- தங்கனாச்சரா சாலை
- புத்தாண்டு விழா
கன்னியாகுமரி: திருச்சி மாவட்டம் முசிறி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (53). இவர் கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். வழக்கம் போல இன்று காலையில் கன்னியாகுமரி முருகன்குன்றம் தங்கநாற்கர சாலையோரமாக நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இன்று புத்தாண்டையொட்டி அப்பகுதி வழியாக சில இளைஞர்கள் நடந்து வந்தனர். அப்போது இளைஞர்கள் சிலர், பாலசுப்பிரமணியத்திடம், ‘தங்களை செல்போனில் போட்டோ எடுத்து தருமாறு கூறியதாக தெரிகிறது. உடனே பாலசுப்பிரமணியனும் இளைஞர் ஒருவரின் செல்போனை வாங்கி போட்டோ எடுக்க முயன்றார். நாற்கர சாலையில் நின்று போட்டோ எடுத்தபோது, அவ்வழியாக வேகமாக வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணியன், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
தகவலறிந்து கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பாலசுப்பிரமணியத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில் இருந்து இன்று புத்தாண்டை கொண்டுவதற்காக காரில் சிலர் கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர். அவர்கள் புத்தாண்டை கொண்டாடிவிட்டு திரும்ப ஊருக்கு சென்றபோது விபத்து நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நடைபயிற்சி சென்றவர் கார் மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post கன்னியாகுமரியில் இன்று இளைஞர்களை போட்டோ எடுத்த போது கார் மோதி, ஆசிரியர் பலி: உதவி செய்தவருக்கு நேர்ந்த பரிதாபம் appeared first on Dinakaran.